மலையக பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பள விவகாரம் தொடர்பில் இன்று நடைபெற்ற சம்பள நிர்ணய சபை கூட்டமும், எவ்வித முடிவும் எட்டப்படாமல் முடிவடைந்துள்ளது.
இன்றைய கூட்டத்திலும் முதலாளிமார் சம்மேளனம் பங்கேற்கவில்லை என்று சம்பள நிர்ணய சபைக் கூட்டத்தில் பங்கேற்றிருந்த தொழிற்சங்கங்கள் தெரிவித்தன.
சம்பள நிர்ணயசபை தொழில் ஆணையாளர் தலைமையில் கொழும்பில் இன்று கூடியது.
தொழிற்சங்க பிரதிநிதிகள் பங்கேற்றிருந்தாலும், முதலாளிமார் சம்மேளனம் கூட்டத்தை புறக்கணித்தது என்று நாடாளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஷ் தெரிவித்தார்.
கடந்த 10 ஆம் திகதி நடைபெற்ற சம்பள நிர்ணயசபைக் கூட்டத்திலும் முதலாளிமார் சம்மேளனம பங்கேற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
மலையக பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு நாள் சம்பளமாக ஆயிரத்து 700 ரூபா வழங்கப்பட வேண்டும் என யோசனை முன்மொழியப்பட்டுள்ளது.










