ரூ. 1700 கிடைக்குமா? சம்பள நிர்ணய சபை 12 ஆம் திகதி கூடுகிறது!

மலையக பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு ஆயிரத்து 700 ரூபா சம்பளத்தை பெற்றுக்கொடுக்க முடியும் என்ற நம்பிக்கை உள்ளது என்று இதொகாவின் பொதுச்செயலாளரும், அமைச்சருமான ஜீவன் தொண்டமான் தெரிவித்தார்.

சம்பள நிர்ணயசபை எதிர்வரும் 12 ஆம் திகதி கூடவுள்ளது எனவும் நாடாளுமன்றத்தில் இன்று உரையாற்றுகையில் அமைச்சர் குறிப்பிட்டார்.

“ கடந்த முறை ஆயிரம் ரூபா சம்பளத்தை பெற்றுக்கொடுப்பதற்கு நடவடிக்கை எடுத்தேன். எனக்கு அனுபவமில்லை, இதனை செய்ய முடியாது எனக் கூறினர், ஆனால் செய்து காட்டினேன்.

வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றுவதே எனது எதிர்பார்ப்பாகும்.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மற்றும் தொழில் அமைச்சர் ஆகியோர் பெருந்தோட்ட மக்கள் தொடர்பில் கூடுதல் அக்கறை செலுத்திவருகின்றனர்.” – எனவும் ஜீவன் தொண்டமான் மேலும் குறிப்பிட்டார்.

Related Articles

Latest Articles