சுமார் 19 கோடி பெறுமதியான போதைப்பொருட்களுடன் சந்தேக நபரொருவர் கடுவலை பகுதியில் வைத்து பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
ஐஸ், ஹெரோயின் மற்றும் ஹேஷ் போதைப்பொருட்களுடனேயே அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
பியகம பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கமைய மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின்போதே இக்கைது இடம்பெற்றுள்ளது.
அத்துடன், மோட்டார் வாகனமும், ஏழு லட்சம் ரூபா பணமும் கைப்பற்றப்பட்டுள்ளது.
மேலதிக விசாரணைகளை பியகம பொலிஸார் மேற்கொண்டுவருகின்றனர்.
கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களின் அளவு சுமார் 30 கிலோ என தெரியவருகின்றது. 31 வயது நபரொருவரே கைது செய்யப்பட்டுள்ளார்.










