ரூ. 850 இற்கு இறங்கியது கரட் விலை!

சந்தையில் தொடர்ச்சியாக அதிகரித்துவந்த கரம்விலை தற்போது குறைவடைந்துவருகின்றது.

ஒரு கட்டத்தில் சந்தையில் ஒரு கிலோ கரட்டின் மொத்த விற்பனை விலை 2 ஆயிரத்து 500 ரூபாவைக்கூட தாண்டியிருந்துது.

எனினும், நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தால் இன்று (01 ) வெளியிடப்பட்டுள்ள மரக்கறி வகைகளின் (ஒரு கிலோ) மொத்த விற்பனை விலையின் பிரகாரம் ஒரு கிலோ கரட்டின் மொத்த விற்பனை விலை 850 ரூபாவாக காணப்படுகின்றது. நேற்று கரட் விலை 1,100 ரூபாவாக காணப்பட்டது.

அத்துடன், கோவா, லீக்ஸ் என்பவற்றின் விலைகளும் குறைவடைந்துள்ளன.

Related Articles

Latest Articles