லக்னோவை வீழ்த்தியது ராஜஸ்தான்

ஐ.பி.எல். தொடரில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் லக்னோ அணியை வீழ்த்தி, ராஜஸ்தான் அணி வெற்றிபெற்றுள்ளது.

ஐ.பி.எல். தொடரில் லக்னோவில் நேற்று நடைபெற்ற 44வது லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் – லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகள் மோதின. இந்த ஆட்டத்தில் நாணயச்சுழற்சியில் வென்ற ராஜஸ்தான் முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது.

இதையடுத்து முதலில் துடுப்பெடுத்தாடிய லக்னோ அணி 20 ஓவர்களில் 5 விக்கெட்டை மட்டும் இழந்து 196 ஓட்டங்கள் குவித்தது. லக்னோ தரப்பில் அதிகபட்சமாக கே.எல்.ராகுல் 76 ரன், தீபக் ஹ_டா 50 ஓட்டங்களையும் எடுத்தனர்.

ராஜஸ்தான் தரப்பில் சந்தீப் சர்மா 2 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.இதையடுத்து 197 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ராஜஸ்தான் அணி களம் இறங்கியது. ராஜஸ்தானின் தொடக்க ஆட்டக்காரர்களாக ஜாஸ் பட்லர் மற்றும் யஷஸ்வி ஜெய்ஸ்வால் ஆகியோர் களம் இறங்கினர். இதில் பட்லர் 34 ஓட்டங்களையும், ஜெய்ஸ்வால் 24 ஓட்டங்களையும், அடுத்து வந்த ரியான் பராக் 14 ஓட்டங்களையும் பெற்று ஆட்டமிழந்தனர்.

இதையடுத்து கேப்டன் சஞ்சு சாம்சன் மற்றும் துருவ் ஜூரெல் இணைந்து அணியை சரிவில் இருந்து மீட்டனர். அதிரடியாக ஆடிய இருவரும் அரைசதம் அடித்தனர். இறுதியில் ராஜஸ்தான் அணி 19 ஓவர்களில் 3 விக்கெட்டை மட்டும் இழந்து 199 ஓட்டங்களைப்பெற்று 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05

Related Articles

Latest Articles