லாஸ் ஏஞ்சல்ஸில் தொடரும் காட்டுத் தீ: பலத்த காற்று எச்சரிக்கையால் மீண்டும் ஆபத்து!

அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸில் இன்னும் காட்டுத் தீ அணையாமல் எரிந்து வரும் நிலையில், மீண்டும் வேகமான காற்று வீசக்கூடும் என்று முன்னெச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால் மீண்டும் பெரிய அழிவை எதிர்நோக்கி காத்திருக்கிறது அந்த மாநகரம்.

அதேநேரத்தில் லாஸ் ஏஞ்சல்ஸ் பகுதிகளில் உள்ள தீயணைப்பு வீரர்கள் இரண்டு பெரிய அளவில் ஏற்பட்ட காட்டுத் தீ மற்றும் இரண்டு சிறிய காட்டுத் தீயை அணைக்கப்போராடி வருகின்றனர்.

நகரில் ஏற்பட்ட மிகப்பெரிய காட்டுத் தீயான பாலிசேட்ஸ் விபத்து 23,000-க்கும் அதிகமான ஏக்கர் பரப்பளவை எரித்துள்ளது. திங்கள்கிழமை நிலவரப்படி 14 சதவீதம் காட்டுத் தீ கட்டுப்படுத்தப்பட்டுள்ளது.

செவ்வாய்க்கிழமை அன்று நகரில் பலத்த காற்று வீசக்கூடும் என்றும், மணிக்கு 70 கிலோ மீட்டர் வேகத்தில் காற்றின் வேகம் இருக்கும் என்றும் ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. இதனால் அங்குள்ள மக்கள் பேர் அழிவை எதிர்நோக்கியுள்ளனர்.

காற்று சுமார் சூறாவளி போல இருக்கும் என்பதால் அவசர ஏற்படுகளும் தயாராக உள்ளன என்று லாஸ் ஏஞ்சல்ஸ் மேயர் கரேன் பாஸ் தெரிவித்துள்ளார். இதனிடையே பாலிசேட்ஸ் மற்றும் ஈட்டன் காட்டுத் தீயில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 24 ஆக அதிகரித்துள்ளது. 23 பேர் காணாமல் போயுள்ளனர்.

இந்நிலையில், காட்டுத் தீயின் போது நடந்த கொள்ளை சம்பவங்கள் காரணமாக 9 பேரும், தீ வைப்பு சம்பம் தொடர்பாக ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளதாக லாஸ் ஏஞ்சல்ஸ் நகர பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த காட்டூத் தீயின் காரணமாக லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் மட்டும் 12 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பெரிய அளவிலான கட்டிடங்கள் நாசமாகியுள்ளன.

Related Articles

Latest Articles