லாஸ் ஏஞ்சல்ஸ் காட்டுத் தீ: பலி எண்ணிக்கை மேலும் அதிகரிப்பு

அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் பரவி வரும் காட்டுத் தீயில் சிக்கி உயிரிழந்தோரின் எண்ணிக்கை, 16 ஆக உயர்ந்துள்ளது.

அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் ஏற்பட்ட காட்டுத்தீ வேகமாக பரவி வருகிறது. இதுவரை, 35 ஆயிரம் ஏக்கர் காட்டுத்தீக்கு இரையாகியுள்ளது.
சுமார் 12 ஆயிரம் வீடுகள் உள்ளிட்ட கட்டடங்கள் எரிந்து நாசமாகியுள்ள நிலையில், பல்லாயிரக்கணக்கான மக்கள் வீடுகளை விட்டு வெளியேறியுள்ளனர்.

காட்டுத் தீயில் சிக்கி 16 பேர் உயிரிழந்துள்ள நிலையில், பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் என அஞ்சப்படுகிறது.

இதனிடையே, மக்கள் வெளியேற்றப்பட்ட வீடுகளில் இருந்து கொள்ளையடித்ததற்காக, 22 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Related Articles

Latest Articles