எதிர்வரும் 27 ஆம் திகதி 3600 மெட்றிக் டொன் அடங்கிய சமையல் எரிவாயு கப்பல் ஒன்று நாட்டிற்கு வருகை தரவுள்ளது. இதனூடாக கொண்டுவரப்படவுள்ள சமையல் எரிவாயு மூன்று தினங்களுக்கு மாத்திரமே போதுமானதாக அமையும் என லிட்ரோ சமையல் எரிவாயு நிறுவனம் அறிவித்துள்ளது
லிட்ரோ சமையல் எரிவாயு நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய, மூன்று தினங்களுக்கு ஒரு முறை நாட்டிற்கு சமையல் எரிவாயுவினை பெற்றுக்கொள்ள அரசாங்கம் டொலர்களை பெற்றுத்தருமாயின் தட்டுபாடின்றி எரிவாயுவினை வழங்க முடியும் என லிட்ரோ சமையல் எரிவாயு நிறுவனம் மேலும் தெரிவித்துள்ளது.