லிந்துலையில் விபத்து – 3 பிள்ளைகளின் தந்தை பலி!

லிந்துலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஹட்டன் –  நுவரெலியா பிரதான வீதியில் லிந்துலை நகரத்தை அண்மித்த பகுதியில் இன்று (20.06.2020) மதியம் 2 மணியனவில் இடம்பெற்ற விபத்தில் குடும்பஸ்தர் ஒருவர் பலியாகியுள்ளார்.

நானுஓயா சமர்செட் பகுதியை சேர்ந்த 3 பிள்ளைகளின் தந்தையான 43 வயதுடைய விஜயசுந்தரம் என்பவரே இவ்வாறு பலியாகியுள்ளார்.

தலவாக்கலை பகுதியிலிருந்து நானுஓயா நோக்கி பயணிக்கையிலேயே அவர் விபத்துக்குள்ளாகியுள்ளார். வேகக்கட்டுப்பாட்டை இழந்து அவர் செலுத்திய மோட்டார் சைக்கிள் காட் கல்லில் மோதியுள்ளது.

இதனையடுத்து மோட்டார் சைக்கிளில் இருந்து அவர் வீசப்பட்டுள்ளார். வீதிக்கு அருகாமையில் இருந்த ‘காட் கல்’ எனப்படுகின்ற எல்லை நிர்ணய கல்லில் தலைபட்டதாலேயே உயிரிழந்தார். அவர் மோட்டார் சைக்கிளில் இருந்து வீசுபடும் போது தலைக்கவசமும் கழன்றுள்ளது.

படுகாயமடைந்த அவர் லிந்துலை வைத்தியசாலைக்கு எடுத்துச்செல்லப்படும் வழியில் உயிரிழந்தார் என்றும், சடலம் பிரேத பரிசோதனைக்காக லிந்துலை வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

க.கிசாந்தன்

Related Articles

Latest Articles