இன்று நள்ளிரவு முதல் அமுலாகும் வகையில் லிற்றோ சமையல் எரிவாயு விலை அதிகரிக்கப்பட்டுள்ளது என்று லிற்றோ நிறுவனம் இன்று அறிவித்தது.
இதன்படி 12.5 கிலோகிராம் எரிவாயு சிலிண்டரின் விலை 145 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், 05 கிலோகிராம் எரிவாயு சிலிண்டரின் விலை 58 ரூபாவாலும், 2.3 கிலோகிராம் எரிவாயு சிலிண்டரின் விலை 26 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளது.
கடந்த 5 தடவைகள் விலை குறைக்கப்பட்டது. தற்போது உலக சந்தையில் எரிவாயு விலை அதிகரித்துள்ளபோதிலும் சிறு அளவு அதிகரிப்பே உள்நாட்டில் ஏற்பட்டுள்ளது என லிற்றோ நிறுவன தலைவர் குறிப்பிட்டார்.
புதிய விலை
12.5kg – 3,127
5kg – 1,256
2.3k – 587
