லுணுகலை பசறை வீதியில் ஹொப்டன் 154 ஆவது மைல் கல்லுக்கு அருகில் மோட்டார் சைக்கிளொன்று இன்று ( 17) மாலை வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளானதில் இருவர் படு காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக லுணுகலை பொலிஸார் தெரிவித்தனர்.
49 மற்றும் 50 வயதுடைய அசேலபுர பதுளை , ஹிந்தகொட பதுளை பகுதியை சேர்ந்த இருவரே இவ்வாறு காயமடைந்துள்ளனர்.
லுணுகலையில் இருந்து பதுளை நோக்கி சென்று கொண்டிருந்த மோட்டார் சைக்களில், லுணுகலை பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட ஹொப்டன் 154 ஆவது மைல் கல்லுக்கு அருகில் வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளானதில் இருவர் பலத்த காயமடைந்த நிலையில் ஹொப்டன் பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் மேலதிக சிகிச்சைகளுக்காக பதுளை பொது வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டு அங்கு சிகிச்சை பெற்று வருவதாக லுணுகலை பொலிஸார் தெரிவித்தனர்.
மேலதிக விசாரணைகளை லுணுகலை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
ராமு தனராஜா