கொரோனா வைரஸ் பரவலைக்கட்டுப்படுத்துவதற்காக நாடு முடக்கப்படும். இதன்படி எத்தனை நாட்களுக்கு முடக்கப்படும் என்பது தொடர்பில் இன்று இரவு முடிவெடுக்கப்படும் என்று அமைச்சர் காமினி லொக்குகே தெரிவித்தார்.
நாடு முடக்கப்பட்டாலும் அத்தியாவசிய சேவைகள் முன்னெடுக்கப்படும் எனவும் அவர் கூறினார்.
அத்துடன், மகாநாயக்க தேரர்களின் கோரிக்கையை ஜனாதிபதி ஏற்றுள்ளார். உத்தியோகப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும் என்று இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன தெரிவித்தார்.
ஜனாதிபதி தலைமையில் இன்று நடைபெற்ற முக்கிய சந்திப்பின் பின்னர் ஊடகங்களிடம் கருத்து வெளியிடுகையிலேயே அமைச்சரும், இராஜாங்க அமைச்சரும் இவ்வாறு கருத்துகளை வெளியிட்டனர்.