வசந்த கரன்னாகொட அமெரிக்காவுக்குள் நுழைய தடை விதிப்பு!

இலங்கை கடற்படையின் முன்னாள் தளபதி அட்மிரல் ஒப் த பிலீட் வசந்த கரன்னாகொட மற்றும் அவரது மனைவி ஆகியோர் அமெரிக்காவிற்குள் பிரவேசிப்பதற்கு தகுதியற்றவர்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்க இராஜாங்க திணைக்களத்தினால் இந்த அறிவித்தல் வௌியிடப்பட்டுள்ளது.

வசந்த கரன்னாகொட கடற்படைத் தளபதியாக செயற்பட்ட காலப்பகுதியில் மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டதாக தெரிவித்து, வசந்த கரன்னாகொட மற்றும் அவரது மனைவி ஆகியோர் அமெரிக்க குடியரசிற்குள் பிரவேசிப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக அமெரிக்க இராஜாங்க திணைக்களத்தின் அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

Related Articles

Latest Articles