‘வடகொரியாவில் உணவுப்பொருட்களை வீணடித்தால் தண்டனை’

வடகொரியாவில் உணவு மற்றும் உணவுப் பொருளை வீணடித்தால் கடும் தண்டனை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

வடகொரியாவில் அடுத்தடுத்து வந்த 3 புயல்கள் மற்றும் கொரோனா தாக்கம், பொருளாதாரத் தடை போன்ற காரணங்களால் அங்கு கடுமையான உணவுத் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், வடகொரியாவில் உணவு மற்றும் உணவுப் பொருளை வீணடித்தால் கடும் தண்டனை வழங்கப்படும் என அந்நாட்டு அதிபர் கிம் ஜாங் உன் எச்சரித்துள்ளார்.

அதிபர் மாளிகை விடுத்துள்ள அறிக்கையில், உணவை வீணடிப்பது பொருளாதாரத்தை வீணடிப்பதற்குச் சமம் என்றும், எந்த நிகழ்வில் எந்த வகையான உணவை உட்கொள்ள வேண்டும் என்றும் பட்டியலிட்டு குறிப்பிடப்பட்டுள்ளது.

Related Articles

Latest Articles