வடக்கு மாகாண விவசாயத் திணைக்களத்தில் முறைகேடுகள் இடம்பெற்றிருக்கின்றன எனவும், அது தொடர்பில் விசாரணை நடத்த குழு ஒன்றை நியமிக்கப்பட்டுள்ளது எனவும் வடக்கு ஆளுநர் தரப்பு தகவல் வெளியிட்டுள்ளது.
வடக்கு மாகாண விவசாயத் திணைக்களப் பணிப்பாளராக இருந்த சிவகுமாரை, ஆளுநர் கட்டாய இடமாற்றம் வழங்கியிருந்த நிலையில் அது பெரும் சர்ச்சையைத் தோற்றுவித்திருந்தது. அத்துடன் விவசாயத் திணைக்களப் பணிப்பாளருக்கு எதிராக ஆளுநர் ஜீவன் தியாகராஜா ஊடகங்களுக்கு தெரிவித்த கருத்துக்கு எதிராக திணைக்களப் பணியாளர்கள் சுகவீன விடுப்புப் போராட்டமும் நடத்தியிருந்தனர்.
இந்தநிலையிலேயே அங்கு முறைகேடுள் இடம்பெற்றிருக்கின்றன எனவும், அது தொடர்பில் விசாரணை நடத்துவதற்காக மூன்று பேர் கொண்ட குழுவை ஆளுநர் நியமித்துள்ளார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வடக்கு மாகாண சிறுவர் நன்னடத்தை திணைக்களத்தின் கணக்காளர் விஷ்ணு, வடக்கு மாகாண விவசாய அமைச்சின் நிர்வாக அதிகாரி சாந்தசீலன், வடக்கு மாகாண விதை உற்பத்திக் கூட்டுறவு நிலையத்தின் உதவிப் பணிப்பாளர் சதீஷ் ஆகியோர் இந்த விசாரணைக்குழுவுக்கு நியமிக்கப்பட்டுள்ளனர்.
