ICFS (International Centre for Foreign Studies) சர்வதேச வெளிநாட்டு கற்கை மையம் ஏற்பாடு செய்துள்ள ” Education யாழ்ப்பாணம்” 8 ஆவது அமர்வு ஏப்ரல் 26 மற்றும் 27 ஆம் திகதிகளில் காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை யாழ். பொது நூலகத்தில் இடம்பெறவுள்ளது.
இந்த நிகழ்வு வடக்கு மாகாணத்தில் உள்ள விண்ணப்பதாரர்களுக்கு அவுஸ்திரேலியா, நியூசிலாந்து, இங்கிலாந்து, கனடா, ஜேர்மனி ஆகிய நாடுகளில் உள்ள கல்வி தொடர்பான தெரிவுகளையும், விருப்பங்களையும் ஆராய்வதற்கான வாய்ப்புகளை வழங்கும் முயற்சியின் 8 ஆவது கட்டமாகும்.
“Education யாழ்ப்பாணம்” நிகழ்ச்சித் திட்டத்தின் சிறப்பு அம்சம் தலைநகர் மற்றும் கற்கை வசதிகளை கொண்ட பகுதிகளுக்கு மட்டுப்படுத்தப் பட்ட கல்வி வாய்ப்புகளை, வடக்கு மாகாணத்திலுள்ள தகுதியுள்ள விண்ணப்பதாரர்களுடன் பகிர்ந்து கொள்வதேயாகும். இலங்கையர் அனைவருக்கும் சமமான கல்வி கிடைக்க ICFS எப்போதும் உறுதிபூண்டு செயலாற்றி வருகின்றமை குறிப்பிடக்கூடியதாகும்.
இங்கு முதன்மைப் படுத்தப்படுகின்ற கற்கைகளுக்காக நாடுகள் பாரிய பணச் செலவுகளை ஏற்படுத்தாத வகையிலும், நிதி பங்களிப்புகள் சலுகை அடிப் படையில் வசதிகளை ஏற்படுத்தும் வகையிலும் அறிமுகப் படுத்துகின்றன.குறிப்பாக மாணவர்களுக்கு வழங்கப்படும் புலமைப் பரிசி ல்கள், விண்ணப்ப தாரர்களின் வசதியைக் கருத்திற் கொள்வதுடன் இந்தச் சந்தர்ப்பம் ஒரு சொற்ப அளவிலேயே “Education யாழ்ப்பாணம் மூலம் கிடைக் கும் சில தனித்துவமான வாய்ப் புகளாகும்.
அங்கு நீங்கள் இது தொடர்பிலான தொழில் வல்லுநர்களைச் சந்தித்து ICFS உடன் வெளிநாட்டில் கல்வியைத் தொடர உங்கள் எதிர்கால இலக்கை அடைவதற்கான வரைவை இங்கு சமர்ப்பிக்க முடியும். ICFS இன் இந்த செயலமர்வுக்கு எந்தவித நுழைவுக் கட்டணங்களும் அறவிடப்பட மாட்டாது என்பதையும், ICFS இன் ஆலோசனைகளுக்கு எவ்வித கட்டண வசூலிப்பும் இல்லை (No consultant fees) என்றும் அறிவிக்கப் பட்டுள்ளது.இது வடக்கில் உள்ள தகுதி யான மாணவர்களுக்கு ஒரு விலைமதிப்பற்ற வாய்ப்பாக அமைகிறது என்பது குறிப்பி டத்தக்கது.