வட்டவளை ஆடைத்தொழிற்சாலை ஊழியர்களுக்கு நீதி கிட்டுமா?

வட்டவளை, ஆடைத்தொழிற்சாலையில் பணிபுரியும் தமக்கு தமிழ், சிங்கள புத்தாண்டை முன்னிட்டு வழங்கப்படும் ‘போனஸ்’ இன்னும் வழங்கப்படவில்லை என தொழிலாளர்கள் தெரிவித்தனர்.

‘போனஸ்’ வழங்குவது தொடர்பில் இன்று திங்கட்கிழமை அறிவிக்கப்படும் என தெரியப்படுத்தப்பட்டிருந்தாலும், இன்றும் எதுவும் அறிவிக்கப்படவில்லை எனவும் தொழிலாளர்கள் கூறினர்.

அத்துடன், ‘போனஸ்’ கோரி போராட்டம் நடத்தினால் தொழிற்சாலை மூடப்படும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டது எனவும் அவர் குறிப்பிட்டனர்.

வட்டவளை, ஆடைத்தொழிற்சாலையில் பணிபுரியும் ஊழியர்கள் கடந்த வெள்ளிக்கிழமை ஆடைத்தொழிற்சாலைக்குள் அறவழி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

‘போனஸ்’ வழங்கப்படாமைக்கு எதிர்ப்பு தெரிவித்தும், விரைவில் வழங்கப்பட வேண்டும் என வலியுறுத்தியுமே இப்போராட்டம் இடம்பெற்றது.

இந்நிலையில் திங்கள் இது தொடர்பில் அறிவிக்கப்படும் என நிர்வாகம் கூறியுள்ளது. எனினும், இன்று உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை என குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.

Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05

Related Articles

Latest Articles