வனவிலங்குகளால் இலங்கையின் விவசாய உற்பத்திகளுக்கு வருடாந்தம் சுமார் 5 ஆயிரத்து 400 கோடி ரூபா இழப்பு ஏற்படுகின்றது என விவசாய அமைப்பு மேற்கொண்ட மதிப்பீட்டில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது என விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்தார்.
விவசாய உற்பத்திகளுக்கு பெருமளவு பாதிப்பை ஏற்படுத்தும் விலங்குகளில் யானை, குரங்கு, மயில், ஆமை, மர அணில் மற்றும் காட்டுப்பன்றி என்பன முன்னிலை வகிக்கின்றன.
ஹெக்டர் கொப்பேகடுவ விவசாய ஆய்வு மற்றும் பயிற்சி நிலையத்தால் வனவிலங்குகளால் விவசாய உற்பத்திகளுக்கு ஏற்படும் பாதிப்பு தொடர்பாக விசேட அறிக்கையொன்று தயாரிக்கப்பட்டுள்ளது. அந்த அறிக்கையில் இவ்விடயம் தெரியவந்துள்ளது எனவும் அமைச்சர் கூறினார்.










