வரட்சியான காலநிலை- நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் வெகுவாக குறைவடைகிறது

கடந்த தினங்களில் நிலவிய வரட்சியான காலநிலை காரணமாக நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் வெகுவாக குறைவடைந்துள்ளது.

இதற்கமைய காசல்ரி நீர்த்தேக்கத்தில் நீரின் அளவு 24.3 சதவீதமாக குறைவடைந்துள்ளதாக அதன் பொறியியலாளர் ஒருவர் தெரிவித்தார்.

மவுசாகலை நீர்த்தேக்கத்தில் 47 சதவீதம் வரையும், மேல் கொத்மலை நீர்த்தேக்கத்தில் 49.1 சதவீதம் வரையுமே தற்போது நீர் சேமிக்கப்பட்டிருப்பதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. மக்கள் நீரை சிக்கனமாக பயன்படுத்துமாறும் கோரப்பட்டுள்ளது.

Related Articles

Latest Articles