வரி குறைப்பு: அடுத்த வாரம் முக்கிய பேச்சு!

இலங்கையின் ஏற்றுமதி பொருட்களுக்கு அமெரிக்காவால் விதிக்கப்பட்டுள்ள தீர்வை வரியை குறைத்துக்கொள்வது தொடர்பான மற்றொரு கலந்துரையாடல் அடுத்த வாரம் இடம்பெறவுள்ளது.

நிதியமைச்சின் அதிகாரிகள் மற்றும் அமெரிக்க வர்த்தக பிரதிநிதி அலுவலக அதிகாரிகளுக்கு இடையே இந்த கலந்துரையாடல் நிகழ்நிலை ஊடாக நடைபெறவுள்ளது.

இதற்கமைய எதிர்வரும் ஆகஸ்ட் முதலாம் திகதிக்கு முன்னர் கலந்துரையாடல்களில் முன்னேற்றம் ஏற்படும் என இலங்கை பிரதிநிதிகள் குழு நம்பிக்கை வெளியிட்டுள்ளது.

வரிக்குறைப்பு தொடர்பாக ஜனாதிபதிக்கும் அமெரிக்க வர்த்தக பிரதிநிதி அலுவலகத்தின் தூதுவருக்கும் இடையே நிகழ்நிலை ஊடாக நேற்று(25) முன்தினம் கலந்துரையாடல் இடம்பெற்றது.

ஒகஸ்ட் முதலாம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில் இலங்கையிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு 30 வீத தீர்வை வரியை அமெரிக்கா அறிவித்தது.

இந்த வரி விகிதத்தை மேலும் குறைக்க அரசாங்கம், அமெரிக்காவுடன் தொடர்ச்சியான கலந்துரையாடல்களில் ஈடுபட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

 

Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05

Related Articles

Latest Articles