வவுனியா, வேப்பங்குளத்தில் வெடிகுண்டுகள் மீட்கப்பட்டன என்று பொலிஸார் தெரிவித்தனர்.
வேப்பங்குளத்தில் உள்ள தனியார் காணியில் அமைந்துள்ள கைவிடப்பட்ட மலசலகூடத்தைப் புனரமைக்கும் செயற்பாட்டை மேற்கொண்ட போதே குழியில் இருந்து குண்டுகள் மீட்கப்பட்டன.
இதன்போது 60 மில்லிமீற்றர் குண்டு ஒன்றும், கைக்குண்டு ஒன்றும், சிறிய ரக மிதிவெடி ஒன்றும் பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளன.
இந்தச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை நெளுக்குளம் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.










