வவுனியாவில் 17 மாணவர்கள் உட்பட 47 பேருக்கு கொவிட் தொற்று

வவுனியா சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 17 மாணவர்கள் உட்பட 47 பேருக்கு கொவிட்-19 தொற்று உறுதியாகியுள்ளது.

அண்மையில் பி.சி.ஆர் பரிசோதனை மேற்கொண்டவர்களுக்கான பெறுபேறுகள் நேற்று(13) வெளியான நிலையில் குறித்த 47 பேரும் அடையாளம் காணப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

மறவன்குளம், தோணிக்கல், பூந்தோட்டம், சிறிராமபுரம், சிதம்பரபுரம், வன்னிக் கோட்டம் மற்றும் பூவரசன்குளம் உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்தவர்களுக்கே இவ்வாறு தொற்று உறுதியாகியுள்ளது.

அத்துடன் குறித்த 47 பேரில் 5 வயதுக்கு குறைவான மூன்று சிறுவர்களும் அடங்குவதாக எமது செய்தியாளர் குறிப்பிட்டார்.

இதனையடுத்து தொற்று உறுதியானவர்களுடன் தொடர்புடையவர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

Related Articles

Latest Articles