வாக்குறுதிகளை நிறைவேற்றி வருகிறது இலங்கை – வெளிவிவகார அமைச்சர் பீரிஸ்

மனித உரிமை ஆணைக்குழுவுக்கு இலங்கை வழங்கிய உறுதிமொழிகளில் பல்வேறு விடயங்களை அரசு செயற்படுத்தியுள்ளது.  நெருக்கடியான சூழலிலும் கூட முக்கிய துறைகளில் முன்னேற்றத்தை எட்டியுள்ளது என்று வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்தார்.

புலம்பெயர் சமூகத்துடனும், எமது நாட்டின் நல்வாழ்வுக்காக அர்ப்பணிப்புடன் செயற்படும் சிவில் சமூக அமைப்புக்களுடனும் இணைந்து செயற்படுவதில் இலங்கை திறந்த மனதுடன் உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

சுவிட்சர்லாந்தின் ஜெனீவாவில் நேற்று (13) ஆரம்பமான ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 50 ஆவது கூட்டத்தொடரில் இலங்கை சார்பில் உரையாற்றும் போதே அமைச்சர் இதனைத் தெரிவித்துள்ளார்.

நாடு எதிர்கொண்டுள்ள சிக்கல்களைத் தீர்க்க முற்பட்டு வருகிறோம். உள்நாட்டு செயன்முறைகள் மூலம் மோதலுக்குப் பிந்தைய ஒருங்கிணைப்பில் மேலும் உறுதியான முன்னேற்றத்தை நிரூபிப்பது கட்டாயமானதும், சவாலானதுமாகும்.

சமீபத்திய சவால்கள் மற்றும் தடைகள் இருந்தபோதிலும், சில முக்கிய துறைகளில் முன்னேற்றத்தை எட்டியுள்ளோம் எனவும் அவர் தெரிவித்தார்.

” கடந்த கூட்டத்தின் பின்னர், பயங்கரவாதத் தடைச் சட்டம் திருத்தப்படுமென மனித உரிமைப் பேரவையில் நான் உறுதியளித்தேன். பயங்கரவாதத் தடைச் சட்டத்தில் திருத்தம் செய்வதற்கான சட்டத்தை நாடாளுமன்றத்தில் முன்வைத்து, அது நிறைவேற்றப்பட்டது.

இந்தத் திருத்தங்கள் தற்போதுள்ள சட்டத்தில் கணிசமான முன்னேற்றத்தையும், ஆழமான தாக்கத்தையும் ஏற்படுத்தும். இலங்கையில் மனித உரிமைகள் மற்றும் சுதந்திரங்களுக்கான காரணத்தை இது மேலும் அதிகரிக்கும். பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் விசாரணைகளை மேற்கொள்வதில் உரிய நடைமுறையைப் பின்பற்றுமாறும், மிகவும் அவசியமான சந்தர்ப்பங்களில் மட்டுமே பயங்கரவாதத் தடைச் சட்டத்தைப் பயன்படுத்துமாறும் சட்ட நடைமுறைப்படுத்தல் அதிகாரிகளுக்கு பொலிஸ் மாஅதிபர் அறிவுறுத்தியுள்ளார். பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டிருந்த 22 பேர் விடுவிக்கப்பட்டுள்ளனர்.” என்றும் வெளிவிவகார அமைச்சர் கூறினார்.

தேசிய ஒருமைப்பாடு மற்றும் நல்லிணக்கத்துக்கான அலுவலகம் நல்லிணக்கத்தை ஊக்குவிப்பதில் அதன் பணிகளை முன்னெடுத்து வருகிறது.

காணாமல் போனோர் தொடர்பான அலுவலகமும் அதன் பணிகளை முன்னெடுத்து வருகிறது. இழப்பீடுகளுக்கான அலுவலகம், தற்போதைய பொருளாதார நெருக்கடிகளுக்கு மத்தியிலும், ஆண்டுக்கான இழப்பீடுகளை வழங்குவதற்காக, அதன் ஆரம்ப ஒதுக்கீடான ரூபா. 759 மில்லியனுக்கும் மேலதிகமாக, ரூபா. 53 மில்லியனை ஒதுக்கியுள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.

இராணுவத்தால் ஆக்கிரமிக்கப்பட்ட 92% க்கும் அதிகமான தனியார் நிலங்கள் முறையான உரிமையாளர்களுக்கு விடுவிக்கப்பட்டுள்ளன. உள்நாட்டில் இடம்பெயர்ந்த மக்களை மீள்குடியேற்றுவதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றது.உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல்கள் தொடர்பாக, சட்ட மாஅதிபர் உயர் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகைகளை தாக்கல் செய்துள்ளதோடு அது தொடர்பான விசாரணைகள் நடைபெற்று வருகின்றன.

புலம்பெயர் சமூகத்துடனும், எமது நாட்டின் நல்வாழ்வுக்காக அர்ப்பணிப்புடன் செயற்படும் சிவில் சமூக அமைப்புக்களுடனும் இணைந்து செயற்படுவதில் இலங்கை திறந்த போக்குடன் உள்ளது என்றும் அமைச்சர் குறிப்பிட்டார்.

Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05

Related Articles

Latest Articles