வாட்டி வதைக்கிறது வறட்சி – 2 லட்சத்துக்கு மேற்பட்டோர் பரிதவிப்பு

பதுளை, இரத்தினபுரி உட்பட நாட்டில் 15 மாவட்டங்களில் நிலவும் கடும் வறட்சியால் 60 ஆயிரத்து 943 குடும்பங்களைச் சேர்ந்த இரண்டு லட்சத்து 652 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் இன்று காலை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், ஆறுகள், குளங்கள், நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் குறைவடைந்துவகின்றன. தாவரங்களும் செத்துமடிகின்றன. மக்களுக்கு குடிநீரை பெறுவதிலும் நெருக்கடி நிலை ஏற்பட்டுள்ளது.

கடும் வறட்சியால் இரத்தினபுரி மாவட்டத்தில் 14 ஆயிரத்து 128 பேரும், பதுளை மாவட்டத்தில் ஆயிரத்து 324 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கடும் வறட்சியால் வடக்கு, கிழக்கு, வடமேல் மற்றும் தென் மாகாணங்களில் வாழ்பவர்களே அதிகம் பாதிக்கப்பட்டுள்ளனர். குடிநீரை பெறுவதிலும் சிக்கல் நிலை உருவாகியுள்ளது.

Related Articles

Latest Articles