‘வாழ்ந்து முடித்த வனராஜன் 14 வயதில் உயிரிழந்தார்’

“தழும்பு சிங்கம்” என்று பட்டப்பெயருடன் கடந்த பதினான்கு வருடங்களாக கென்யாவில் வாழ்ந்து வந்தாலும் உலகளாவிய ரீதியில் பல லட்சக்கணக்கான ரசிகர்களை கொண்டிருந்த பிரபலமான சிங்கம் கடந்த செவ்வாய்க்கிழமை உயிரிழந்தது.

2012 இல் நான்கு வயதாக இருக்கும்போது இன்னொரு சிங்கத்துடனான சண்டையின்போது எறியப்பட்ட ஈட்டி ஒன்று கண்ணிற்கு மிக அருகில் முகத்தை கிழித்துக்கொண்ட நாள்முதல், “தழும்பு சிங்கம்” என்ற அழைக்கப்பட்டு உலகப்பிரபலமானது. சிங்கத்துக்கே இருக்கக்கூடிய அச்சத்திலும் பார்க்க, இந்த தழும்பு பார்ப்போர் எல்லோருக்கும் கூடுதல் பீதியை கிளப்பியது.

“தழும்பு சிங்கம்” – என்று பிரபலமாக அழைக்கப்பட்ட இந்த சிங்கத்துக்கு தனி பேஸ்புக் பக்கம்கூட உள்ளது. இந்த சிங்கத்தை வைத்து பல ஆவணப்படங்கள் தயாரிக்கப்பட்டிருக்கின்றன. இதனைக்காண்பதற்கென்று கென்யாவுக்கு போகின்ற சுற்றுலாவாசிகள் விசேட பயணங்களை மேற்கொண்டுள்ளார்கள்.

அவ்வளவுக்கு பிஸியான பிரபலமாக கடந்த 14 வருடங்கள் வாழ்ந்த இந்த சிங்கம், கடந்த செவ்வாய்க்கிழமை யாருக்கும் இடையூறு விளைவிக்காமல் இறுதி மூச்சோடு விடைபெற்றுக்கொண்டது என்று இந்த சிங்கத்தின் பராமரிப்பாளர்கள் விடுத்த அறிக்கையில் தெரிவித்துள்ளனர்.

சிங்கங்களின் அதிகூடிய ஆயுள்காலம் பத்து முதல் 14 வருடங்கள்தான் என்று வன விலங்கு ஆராய்ச்சியாளர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

சுமார் நானூறு சதுர மைல் பரப்பளவுடைய கென்யாவின் பிரபல வனப்பிராந்தியத்தில் தனது 3 சகோதரர்களுடன் இந்த தழும்பு சிங்கம் வாழ்ந்து வந்தமை குறிப்பிடத்தக்கது.

Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05

Related Articles

Latest Articles