விக்டோரியா நீர்த்தேக்கத்தை அண்மித்த பகுதியில் 10 புதிய நில அதிர்வு கண்காணிப்பு கருவிகளை பொருத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஜேர்மனியில் இருந்தே மேற்படி கருவிகள் கொண்டுவரப்படவுள்ளன – என்று புவிசரிதவியல் மற்றும் சுரங்கப் பணியகத்தின் தலைவர் அனுர வல்பொல தெரிவித்தார்.
” தற்போது காணப்படுகின்ற நிலைமையின் பிரகாரம் நில அதிர்வுகளுக்கான அளவை துல்லியமாக கணிக்க முடியாத நிலையுள்ளது. எனவே, நில அதிர்வு கண்காணிப்பு கருவிகள் பொருத்தப்பட்டதன் பின்னர் விக்டோரியா நீர்த்தேக்கத்தை அண்மித்து ஏற்படக்கூடிய அதிர்வுகளை முன்னரைவிட சிறப்பான முறையில் கண்காணிக்க முடியும்.” – எனவும் அவர் கூறினார்.
மஹாகனதராவ, பல்லெகல, புத்தங்கல மற்றும் ஹக்மன ஆகிய பகுதிகளில் நில அதிர்வு கண்காணிப்பு கருவிகள் பொருத்தப்பட்டுள்ளன. கடந்த நாட்களில் பல்வேறு சந்தர்ப்பங்களில் விக்டோரியா நீர்த்தேக்கத்தை அண்மித்த பகுதிகளில் நில அதிர்வு பதிவாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
