விடுதலையாகவிருந்த கைதி திடீரென உயிரிழப்பு!

பதுளை, தல்தென திறந்தவெளி சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த சிறைக்கைதி ஒருவர் திடீர் சுகயீனமுற்ற நிலையில் மரணித்துள்ளதாக பதுளை பொலிஸார் தெரிவித்தனர்.

மட்டக்குளி பகுதியை சேர்ந்த 50 வயதுடைய நபரே இவ்வாறு உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த கைதி ஐஸ் போதைப்பொருளுக்கு அடிமையானவர் என்றும் 2024.03.01 ம் திகதி தல்தென திறந்தவெளி சிறைச்சாலைக்கு கொண்டு வரப்பட்டு எதிர்வரும் 2024.07.11 திகதி விடுதலை பெற இருந்த நிலையிலேயே திடீர் சுகயீனமுற்ற நிலையில் பதுளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் நேற்று (12) ம் திகதி 12.30 மணியளவில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

உயிரிழந்தமைக்கான காரணம் இதுவரையில் கண்டறியாத போதிலும் சடலம் பிரேத பரிசோதனைக்காக பதுளை பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதாக பதுளை பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

ராமு தனராஜா

Related Articles

Latest Articles