விபத்தில் இளைஞன் பலி – யாழில் சோகம்!

யாழ். நாவாந்துறைப் பகுதியில் இன்று மாலை இடம்பெற்ற கோர விபத்தில் இளைஞர் ஒருவர் சம்பவ இடத்திலேயே பலியாகியுள்ளார்.

மோட்டார் சைக்கிளும் பட்டா ரக வாகனமும் நேருக்கு நேர் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

இதில் மோட்டார் சைக்கிளில் பயணித்த 35 வயதுடைய சக்திதாசன் டான்சன் என்ற இளைஞரே உயிரிழந்துள்ளார்.

பட்டா ரக வாகனத்தைச் செலுத்திய சாரதி சம்பவ இடத்திலிருந்து தப்பியோடியுள்ளார்.
இந்த விபத்து தொடர்பில் யாழ்ப்பாணம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Related Articles

Latest Articles