பதுளை – பிபிலையில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவர் உயிரிழந்துள்ளனர்.
பிபிலை, 03 ஆம் கட்டை பகுதியில் பஸ் ஒன்று வேனுடன் நேருக்கு நேர் மோதி விபத்து இடம்பெற்றுள்ளது.
விபத்தில் கணவன், மனைவி மற்றும் அவரது சகோதரி உயிரிழந்துள்ளதுடன், காயமடைந்த மேலும் அறுவர் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
மூவரும் 70 வயதிற்கும் மேற்பட்டவர்கள் என பொலிஸார் தெரிவித்தனர்.
விபத்துடன் தொடர்புடைய பஸ்ஸின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளார்.