விபத்தில் 15 வயது மாணவன் பலி: கம்பளையில் சோகம்

கண்டி, நுவரெலியா பிரதான வீதியில் கம்பளை மஹர பகுதியில் நேற்றிரவு இடம்பெற்ற வாகன விபத்தில் 15 வயது பாடசாலை மாணவர் ஒருவர் பலியாகியுள்ளார்.

புசல்லாவை, சங்குவாரி கீழ் பிரிவு தோட்டத்தைச் சேர்ந்த மாணவர் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

வேனொன்றும், ஆட்டோவும் மோதியே இவ்விபத்து இடம்பெற்றுள்ளது.

விபத்தில் ஆட்டோவில் பயணித்த மூவர் காயமடைந்த நிலையில், கம்பளை ஆதாரமருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இதன்போது, சிகிச்சை பெற்று வந்த 15 வயது மாணவன் உயிரிழந்துள்ளார்.

விபத்து தொடர்பில் கம்பளை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுவருகின்றனர்.

Related Articles

Latest Articles