பண்டாரகம – களுத்துறை பிரதான வீதியில் மொரோந்துடுவ பகுதியில் இன்று அதிகாலை இடம்பெற்ற விபத்தில் இரு இளைஞர்கள் பலியாகியுள்ளனர்.
இரு மோட்டார் சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதுண்டதாலேயே இவ்விபத்து இடம்பெற்றுள்ளது.
இளைஞர்கள் குழுவொன்று, மோட்டார் சைக்கிள் சாகசத்தில் ஈடுபட்டுள்ளது. இவ்வேளையிலேயே விபத்து இடம்பெற்றுள்ளது.
விபத்தையடுத்து இளைஞர்கள் குழு தப்பிச்சென்றுள்ளது.
