விமான விபத்தில் அறுவர் பலி!

மாது

மாதுரு ஓயா நீர்த்தேக்கத்தில் வீழ்ந்து இராணுவ விமானமொன்று விபத்துக்குள்ளானதில் ஆறு படையினர் பலியாகியுள்ளனர்.

இராணுவ விசேட படையணி உறுப்பினர்கள் நால்வரும், விமான பாதுகாப்பு படையினர் இருவருமே இவ்வாறு உயிரிழந்துள்ளனர் என்று விமானப்படை தெரிவித்துள்ளது.

இலங்கை விமானப் படைக்கு சொந்தமான பெல் 212 ரக ஹெலிகொப்டரொன்றே இன்று காலை 8.15 மணியளவில் மாதுரு ஓயா நீர்த்தேக்கத்தில் வீழ்ந்து அனர்த்தத்துக்குள்ளாகியுள்ளது.

2 விமானிகள் உட்பட 12 பேர் விமானத்தில் பயணித்துள்ளனர். காயமடைந்தவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சைப்பெற்றுவருகின்றனர்.

குறித்த விபத்து தொடர்பில் விமானப்படை விசாரணைகளை முன்னெடுத்துவருகின்றது.

ரு ஓயா நீர்த்தேக்கத்தில் வீழ்ந்து விமானம் விபத்துக்குள்ளானதில் அறுவர் பலியாகியுள்ளனர்.

இலங்கை விமானப் படைக்கு சொந்தமான பெல் 212 ரக ஹெலிகொப்டரொன்று இன்று(09) காலை 8.15 மணியளவில் மாதுரு ஓயா நீர்த்தேக்கத்தில் வீழ்ந்து விபத்திற்குள்ளானது.

ஹிங்குராங்கொட விமானப் படை முகாமில் இருந்து மாதுரு ஓயா பகுதியில் இடம்பெற்ற கண்காட்சியொன்றில் பறந்துகொண்டிருந்தபோது இந்த அனர்த்தம் ஏற்பட்டுள்ளதாக விமானப்படைப் பேச்சாளர் குரூப் கெப்டன் எரந்த கீகனகே தெரிவித்தார்.

இதன்போது இராணுவ விசேட படையணி உறுப்பினர்கள் சிலர் அதில் இருந்ததாக குரூப் கெப்டன் எரந்த கீகனகே குறிப்பிட்டார்.
2 விமானிகள் உட்பட 12 பேர் விமானத்தில் இருந்துள்ளனர். உயிரிழந்த அனைவரும் படையினர் என தெரியவருகின்றது.

Related Articles

Latest Articles