விரைவில் அமைச்சரவை மாற்றம்! இரு இளம் அரசியல் வாதிகளுக்கு அமைச்சு பதவி!!

வரவு – செலவுத் திட்ட விவாதம் முடிவடைந்த பின்னர், அமைச்சரவையில் மாற்றத்தை ஏற்படுத்துவதற்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச திட்டமிட்டுள்ளார் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதன்படி சில அமைச்சுகள் கைமாறவுள்ளதுடன், மேலும் சில அமைச்சுகளுடன் புதிய விடயதானங்கள் இணைக்கப்படவுள்ளன. இதற்கான ஏற்பாடுகள் தற்போது இடம்பெற்றுவருகின்றன எனக் கூறப்படுகின்றது.

அரச நிறுவனங்களின் உயர் பதவிகளிலும் சில மாற்றங்களை ஏற்படுத்தவும் உத்தேசித்துள்ளார்.
இராஜாங்க அமைச்சர்களான ரொஷான் ரணசிங்க, சனத் நிஷாந்த ஆகிய இருவரும் அமைச்சரவைக்கு உள்வாங்கப்படலாம் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது.

2022 ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டம்மீதான விவாதம் எதிர்வரும் 12 ஆம் திகதி ஆரம்பமாகி, டிசம்பர் 10 ஆம் திகதி நிறைவடையவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related Articles

Latest Articles