‘விரைவில் தடுப்பூசி ஏற்றுங்கள்’ – மடக்கும்புர தோட்ட மக்கள் கோரிக்கை

கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து தம்மை பாதுகாத்துக்கொள்ள மக்கள் கட்டாயம் தடுப்பூசி ஏற்றிக்கொள்ள வேண்டும் என அரசாங்கம் அறிவிப்புகளை விடுத்துவருகின்ற நிலையில், தடுப்பூசி திட்டத்தில் தாம் புறக்கணிக்கப்படுவதாக மடக்கும்புர பகுதியில் வாழும் மக்கள் தெரிவிக்கின்றனர்.

கொத்மலை சுகாதார பிரிவிற்கு உட்பட்ட மடம்கும்புர பிரிவிலுள்ள தோட்டங்களில் 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி ஏற்றப்பட்டுள்ளது. அதன்பின்னர் 30 முதல் 59 வயது பிரிவினருக்கு தடுப்பூசி வழங்கப்படும் எனக் கூறப்பட்டுள்ளது. எனினும், சில தோட்டங்களில் இன்னும் தடுப்பூசி வழங்கப்படவில்லை என மக்கள் தெரிவிக்கின்றனர்.

“மலையகத்தில் பெரும்பாலான பகுதிகளில் முதல்கட்ட தடுப்பூசி ஏற்றப்பட்டு இரண்டாவது தடுப்பூசியும் ஏற்றப்பட்டுள்ளது. ஆனால் எமது பகுதிகளில் 30 -59 வயது பிரிவினருக்கு இன்னும் தடுப்பூசி வழங்கப்படவில்லை.

மலையக தோட்டப்புறங்களிலும் கொரோனா பரவல் தீவிரமடைந்துள்ள நிலையில் தடுப்பூசி ஏற்றாமல் தோட்டத்தொழிலுக்கு கூட செல்வதற்கு அச்சமாக உள்ளது. கடந்தவாரம் தடுப்பூசி ஏற்றப்படுவதாக கூறி வரவழைக்கப்பட்டு ஏமாற்றத்துடனேயே திரும்பினோம். எனவே இனியாவது எம்மை புறக்கணிக்காமல் விரைந்து தடுப்பூசிகளை ஏற்றுங்கள்.” – என்று மடக்கும்புர மக்கள் கேட்டுக்கொண்டுள்ளனர்.

இது தொடர்பில் குறித்த பகுதி கிராம சேவகர் குறிப்பிடுகின்ற போது, கடந்தவாரம் தடுப்பூசி பற்றாக்குறையால் செலுத்தமுடியாமல் போய்விட்டது.மறுபடி ஏற்றுவதற்கான திகதி அறிவிக்கப்படவில்லை. அவ்வாறு அறிவிக்கப்படும்பட்சத்தில் மடக்கும்புர பகுதி மக்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.” – என்றார்.

மடம்கும்புர தோட்டத்துக்குட்பட்ட சில தோட்டங்களில் 30-59 வயது பிரிவினருக்கும் முதல் கட்ட தடுப்பூசி ஏற்றப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. தெற்கு மடம்கும்புர தோட்டத்தில் தடுப்பூசி திட்டம் வெற்றிகரமாக முன்னெடுக்கப்பட்டுவருகின்றது.

நிருபர் – நீலமேகம் பிரசாந்த்

Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05

Related Articles

Latest Articles