” உணவு எடுத்துக் கொள்ளும் எஸ்.பி.பி., விரைவில் குணமடைந்து, வீடு திரும்ப ஆர்வமாக உள்ளார்.” என்று அவரது மகன் சரண் தெரிவித்தார்.
கொரோனா தொற்றுக்குள்ளான, பிரபல திரைப்பட பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் (75) ஆகஸ்ட் 5 முதல், சென்னை எம்.ஜி.எம்., ஹெல்த் கேர் மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ளார்.
அவருக்கு, நுரையீரல் தொற்று முழுதையும் குணப்படுத்தும் சிகிச்சைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
எஸ்.பி.பி., மகன் சரண், சமூக வலைதளத்தில் நேற்று வெளியிட்ட பதிவில்,
” அப்பாவின் உடல் நிலை சீராக இருப்பதுடன், நல்ல முன்னேற்றத்தையும் அடைந்து வருகிறது. அவருக்கு, எக்மோ மற்றும், வென்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சை தொடர்ந்து வருகிறது.
பிசியோதெரபியும் அளிக்கப்பட்டு வருகிறது. திரவ உணவு எடுத்துக் கொள்கிறார். விரைவில் குணமடைந்து, வீடு திரும்ப ஆர்வமாக இருக்கிறார்.” என்று குறிப்பிட்டுள்ளார்.