டயகம தொடக்கம் தலவாக்கலை வரை சேவையில் ஈடுபட்டுவந்த அனைத்து தனியார் பஸ்களின் சாரதிகள் மற்றும் நடத்துனர்கள் இன்று செவ்வாய் (18) காலை முதல் பணிப்புறக்கணிப்பில் ஈடுப்பட்டுள்ளனர்.
இதன் காரணமாக டயகம நகர் தொடக்கம் மன்றாசி, ஹோல்புரூக்,திஸ்பன சந்தி,வழியாக மெராயா ஊடாக நுவரெலியாவுக்கும், நாகசேணை,மற்றும் லிந்துலை வழியாக தலவாக்கலைக்கு பயணிக்கும் தனியார் போக்குவரத்து ஸ்தம்பித்த அடைந்துள்ளது.
இதனால் குறித்த இவ் வீதி ஊடாக பயணிக்கும் பயணிகளுக்கு போக்குவரத்து சிக்கல் ஏற்பட்டுள்ளதாக பிரதேச மக்கள் தெரிவித்தனர்.
அதேநேரத்தில் இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேரூந்துகள் சேவையில் ஈடுப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
மிக நீண்டகாலமாக டயகம நகரிலிருந்து லிந்துலை நகரம் வரை சுமார் 23 கிலோமீட்டர் தூர பிரதான வீதி செப்பனிடப்படால் குன்றும் குழியுமாக காணப்படுகிறது. இவ் வீதியின் சீர்த்திருத்தம் தொடர்பில் சம்பந்தப்பட்டவர்கள் தாமதபோக்கை கடைப்பிடித்து வருகின்றனர்.
எவ்வளவுதான் நிலைமையை எடுத்துறைத்தாலும் கண்டும் காணாததும் போலவும்,கேட்டும் கேட்காதது போலவும் அதிகாரிகளும், அரசியல்வாதிகளும் செயலபடுவதாகவும் ,எமக்கு இவ் பிரதான வீதியை செப்பனிட்டு தருவதற்கு உடனடி நடவடிக்கை எடுக்க கோரிக்கைகள் முன் வைத்து இவ் வீதி ஊடாகதனியார் போக்குவரத்து சேவையை ஸ்தம்பிதம்படுத்தியுள்ளதாக தனியார் போக்குவரத்து உரிமையாளர்கள்,மற்றும் சாரதிகள் தெரிவித்தனர்.
ஆ.ரமேஷ்
