வீதி அபிவிருத்திக்கே வழி இல்லை – இந்நிலையில் தேர்தலை எப்படி நடத்துவது?

ஜனாதிபதி தேர்தல் அல்ல, இந்த வருடத்துக்குள் எந்தவொரு தேர்தலும் நடைபெறாது என்பதற்கான சாத்தியமே நிலவுகின்றது என்று அமைச்சரவைப் பேச்சாளரும், அமைச்சருமான பந்துல குணவர்தன தெரிவித்தார்.

அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் வாராந்த ஊடகவியலாளர் சந்திப்பு அரச தகவல் திணைக்களத்தில் நேற்று நடைபெற்றது.

இதன்போது ஜனாதிபதி தேர்தலை முன்கூட்டியே நடத்துவதற்கான ஏற்பாடுகள் இடம்பெற்றுவருகின்றனவா என ஊடகவியலாளர் ஒருவரால் எழுப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கையிலேயே அமைச்சர் மேற்கண்டவாறு கூறினார்.

” நாட்டில் வீதி அபிவிருத்திகள் இடைநடுவில் உள்ளன. நாடளாவிய ரீதியில் அடையாளம் காணப்பட்டுள்ள சேதமடைந்துள்ள வீதிகளை மக்கள் பயனிக்ககூடிய வகையில் புனரமைப்பதற்கு 53 மில்லியன் அமெரிக்க டொலர்கள் அவசியமென மதிப்பிடப்பட்டுள்ளது. வெளிநாட்டு கடன் மற்றும் நிதி உதவிகள்மூலமே இவற்றுக்கான பணிகள் இடம்பெறும். கடன் மறுசீரமைப்பு செய்யப்பட்டு, கடன் மீள செலுத்தப்படும் நடைமுறை தெளிவுபடுத்தப்பட்ட பின்னரே எமக்கு நிதி வழங்கப்படும் எனக் கூறப்படுகின்றது. எனவே, வழிகாட்டல் திட்டம் இல்லையேல் வீதிகளை புனரமைக்க முடியாது. நிலைமை இப்படி இருக்கையில் எப்படி தேர்தலை நடத்த முடியும்?” – எனவும் அமைச்சர் கேள்வி எழுப்பினார்.

” டொலர் குட்டி போடாது. பணம் அச்சிடவும் முடியாது. எனவே, கடன் மறுசீரமைப்பு திட்டம் பற்றி பேச்சு நடத்த ஜனாதிபதி பிரான்ஸ், பிரிட்டன் ஆகிய நாடுகளுக்கு செல்கின்றார். பரிஸ் கிளப் உறுப்பினர்களை சந்திப்பார். கடன் மறுசீரமைப்பு பற்றியே தற்போது முயற்சிக்கப்படுகின்றது. மாறாக ஜனாதிபதி தேர்தலை நடத்த அல்ல. நாடு இயல்பு நிலைக்கு திரும்பிய பின்னர் தேர்தல் நடத்தப்படும். சட்டப்பூர்வமாக தேர்தல் நடத்த வேண்டிய காலப்பகுதியில் அது நடைபெறும்.” எனவும் அமைச்சர் பந்துல குணவர்தன குறிப்பிட்டார்.

Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05

Related Articles

Latest Articles