இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளரும், அமைச்சருமான ஜீவன் தொண்டமான், வவுனியா, நெடுங்கேணி – வெடுக்குநாறி மலைக்கு இன்று காலை விஜயம் மேற்கொள்கின்றார்.
அங்கு ஆன்மீக வழிபாடுகளில் ஈடுபட்ட பின்னர், உடைத்து வீசப்பட்ட ஆதிலிங்கம் சிலை உள்ளிட்ட விக்கிரங்களை பிரதிஷ்டை செய்வதற்கான சாத்தியப்பாடுகள் பற்றி ஆராய்வார்.
அதன்பின்னர் இது சம்பந்தமாக திங்கட்கிழமை நடைபெறும் அமைச்சரவைக் கூட்டத்துக்கு அமைச்சர் ஜீவன் தொண்டமான் தெளிவுபடுத்தவுள்ளார்.
வெடுக்குநாறி மலை ஆதிலிங்கம் சிலை உடைத்து வீசப்பட்ட சம்பவம் தொடர்பில் விசாரணை நடத்தி முழுமையானதொரு அறிக்கையை வழங்குமாறு பொலிஸ்மா அதிபரிடம் ஜீவன் தொண்டமான் கோரிக்கை விடுத்திருந்தார்.
இது சம்பந்தமாக ஜனாதிபதியுடனும் பேச்சு நடத்தியிருந்தார். இவ்வாறானதொரு பின்புலத்திலேயே இன்று வெடுக்குநாறி மலைக்கு செல்கின்றார்.










