இந்திய துணை ஜனாதிபதி சி. பி. ராதாகிருஷ்ணன், நுவரெலியா, ராகலை, லிட்டில்ஸ்டே Liddlesdale தோட்டத்தில் இந்திய அரசாங்கத்தின் உதவியுடன் இந்திய வீடமைப்புத் திட்டத்தின் (மூன்றாம் கட்டம்) கீழ் நிர்மாணிக்கப்பட்ட வீடுகளைப் பார்வையிட்டதுடன், அதன் பயனாளிகளுடன் கலந்துரையாடினார்.
இந்திய வம்சாவளி தமிழ் சமூகத்தினரைச் சந்தித்ததில் மகிழ்ச்சியடைவதாகத் தெரிவித்த துணை ஜனாதிபதி, இலங்கையில் வாழும் தமிழ் மக்களின் நலனில் இந்திய அரசாங்கமும் மக்களும் மிகுந்த அர்ப்பணிப்புடன் இருப்பதாகக் குறிப்பிட்டார்.
இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் உள்ள தமிழ் குடும்பங்களுக்கும், மலையகப் பகுதிகளில் வாழும் இந்திய வம்சாவளி தமிழ் குடும்பங்களுக்கும் இதுவரை 50,000 வீடுகளை இந்திய அரசாங்கம் வழங்கியுள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார்.
அத்துடன், இந்திய வீடமைப்புத் திட்டத்தின் நான்காம் கட்டத்தின் கீழ் மேலதிகமாக 10,000 வீடுகள் வழங்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.










