கம்பஹா மாவட்டத்திலுள்ள, வெயாங்கொடை பொலிஸ் பிரிவிலும் உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் பொலிஸ் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது.
மறு அறிவித்தல் வரை இந்த ஊரடங்குச் சட்டம் அமுலில் இருக்கும் என இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
திவுலப்பிட்டிய பகுதியில் கொரோனா தொற்றாளர் ஒருவர் அடையாளம் காணப்பட்டதையடுத்து இன்று முற்பகல் 10 மணி முதல் திவுலப்பிட்டிய, மினுவங்கொட ஆகிய பொலிஸ் பிரிவுகளுக்கு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டிருந்தது. இந்நிலையிலேயே வெயாங்கொடை பொலிஸ் பிரிவிலும் ஊரடங்கு உத்தரவு அமுலுக்கு வந்துள்ளது.