வெற்றிவாகை சூடியது கொல்கத்தா அணி!

ஐபிஎல் கிரிக்கெட் திருவிழாவில் ஹைதராபாத் அணியை வீழ்த்தி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் 3-வது முறையாக சாம்பியன் பட்டம் வென்றது.

17ஆவது ஐ.பி.எல் கிரிக்கெட் தொடரில் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நேற்று நடைபெற்ற இறுதிப்போட்டியில் ஹைதராபாத் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் விளையாடின. இதில் டாஸ் வென்ற ஹைதராபாத் அணியின் கேப்டன் பேட் கம்மின்ஸ் பேட்டிங்கைத் தேர்வு செய்தார்.

இதையடுத்து அந்த அணியில் தொடக்க ஆட்டக்காரர்களாக அபிஷேக் சர்மா மற்றும் டிராவிஸ் ஹெட் களமிறங்கினர். அபிஷேக் சர்மா 2 ரன்னிலும், ஹெட் ரன் ஏதும் எடுக்காமலும் ஆட்டமிழந்தனர். பின்னர் கொல்கத்தா அணியின் அசத்தலான பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் திணறிய ஹைதராபாத் அணி அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து திணறியது.

எய்டன் மார்க்ரம் 20 ரன்னும், நீதிஷ் ரெட்டி 13 ரன்னும், கிளாசன் 16 ரன்னும் எடுத்து வரிசையாக விக்கெட்டுகளை இழந்து வெளியேறினர். இறுதியில் கேப்டன் கம்மின்ஸ் 19 பந்துகளில் 24 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்க, ஹைதராபாத் அணி 18.3 ஓவர்களில் 113 ரன்களுக்கு ஆல்அவுட் ஆனது. கொல்கத்தா தரப்பில் ஆண்ட்ரே ரஸல் 3 விக்கெட்டுகளும், ஹர்ஷித் ராணா மற்றும் மிட்செல் ஸ்டார்க் தலா 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.

114 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்கை நோக்கி கொல்கத்தா அணி களமிறங்கியது. கொல்கத்தா அணியின் தொடக்க ஆட்டக்காரரான சுனில் நைரன் 6 ரன்களில் ஆட்டமிழந்தார். அதன் பின் ரஹ்மனுல்லா குர்பாஸ் மற்றும் வெங்கடேஷ் ஐயர் ஜோடி அபாரமாக விளையாடியது. 39 ரன்கள் எடுத்திருந்த போது குர்பாஸ் ஆட்டமிழந்தார். பின் களமிறங்கிய கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் – வெங்கடேஷ் ஐயருடன் ஜோடி சேர்ந்து சிறப்பாக விளையாடியது.

அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்திய வெங்கடேஷ், 26 பந்துகளில் 52 ரன்கள் எடுத்து கடைசி வரை களத்தில் இருந்தார். கொல்கத்தா வேகப்பந்து வீச்சாளர் மிட்செல் ஸ்டார்க் ஆட்ட நாயகன் விருது பெற்றார். முன்னதாக கொல்கத்தா நைட் ரைடர்ஸ் கடந்த 2012 மற்றும் 2014ஆம் ஆண்டுகளில் சாம்பியன் பட்டம் வென்றிருந்தது குறிப்பிடத்தக்கது. மேலும் சென்னை மண்ணில் 2-வது முறையாக சாம்பியன் பட்டத்தை வென்றது கொல்கத்தா அணி.

 

 

Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05

Related Articles

Latest Articles