வெற்றி கணக்கை துவங்கியது ஆஸ்திரேலியா

ஓமான் அணிக்கு எதிரான போட்டியில் 39 ஓட்டங்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலிய அணி வெற்றிபெற்றது.

ரி – 20 உலகக்கோப்பையில் இன்று நடைபெற்ற 10-வது லீக் ஆட்டத்தில் ஆஸ்திரேலியா – ஓமன் அணிகள் மோதின. இந்த போட்டியில் நாணயச்சுழற்சியில் வென்ற ஓமன் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.

அதன்படி ஆஸ்திரேலிய அணி முதலில் துடுப்பெடுத்தாடியது. தொடக்க ஆட்டக்காரர்களாக டேவிட் வார்னர் – டிராவிஸ் ஹெட் களமிறங்கினர். இவர்களில் ஹெட் 12 ரன்னில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த கேப்டன் மார்ஷ் 14 ரன்னிலும், அதிரடி ஆட்டக்காரர் மேக்ஸ்வெல் டக் அவுட் ஆகியும் வெளியேறினர்.

ஆஸ்திரேலிய அணி 50 ரன்களில் 3 முக்கிய விக்கெட்டுகளை பறிகொடுத்தது. எனினும், வார்னர் – ஸ்டோய்னிஸ் இருவரும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை உயர்த்தினர். குறிப்பாக வார்னர் அதிரடி காட்டாமல் நிதானமாக விளையாடினார். அவர் 51 பந்துகளில் 56 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

இறுதியில் ஸ்டோய்னிஸ் அதிரடி காட்டி அரைசதம் கடக்க, ஆஸ்திரேலிய அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 164 ரன்கள் எடுத்துள்ளது.

ஸ்டோய்னிஸ் 36 பந்துகளில் 67 ரன்கள் எடுத்தார். ஓமன் அணி தரப்பில் மெஹ்ரான் கான் அதிகபட்சமாக 2 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.இதையடுத்து 165 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஓமன் அணி பேட்டிங் செய்தது.

ஆஸ்திரேலிய அணியின் அபார பந்துவீச்சால் அந்த அணி அடுத்தடுத்து விக்கெட்டுகளை பறிகொடுத்தது. இறுதியில் 20 ஓவர்கள் முடிவில் ஓமன் அணியால் 125 ரன்களே எடுக்க முடிந்தது. இதன் மூலம் 39 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலிய அணி வெற்றிபெற்றது. அத்துடன், நடப்பு தொடரில் தனது முதல் வெற்றியை பதிவுசெய்தது.

Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05

Related Articles

Latest Articles