வெல்லவாய பகுதியில் பதிவாகியுள்ள சிறு நில அதிர்வுகள் தொடர்பான ஆய்வறிக்கை இன்று வெளியிடப்படவுள்ளது.
நில அதிர்வுகள் தொடர்பான கள ஆய்வுகள் நேற்று (12) இரண்டாவது நாளாகவும் இடம்பெற்றன.
புவிசரிதவியல் மற்றும் சுரங்கப் பணியகத்தின் அதிகாரிகளால் இந்த ஆய்வு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன.
வெல்லவாய, புத்தல உள்ளிட்ட பகுதிகளில் கடந்த (11) மற்றும் (12) ஆம் திகதிகளில் நில அதிர்வுகள் பதிவாகின.
நில அதிர்வுகள் தொடர்பான ஆய்வறிக்கை இன்று (13) வெளியிடப்படும் என
புவிசரிதவியல் மற்றும் சுரங்கப் பணியகத்தின் சிரேஷ்ட நில அதிர்வு தொடர்பான நிபுணர் நில்மினி தல்தேன தெரிவித்தார்.
