வெளிநாடுகளில் இருந்து வருபவர்கள் மூலம் கொரோனா வைரஸ் வகையைச் சேர்ந்த டெல்டா பிளஸ் இலங்கையில் பரப்புவதற்கான வாய்ப்புகள் அதிகம் காணப்படுவதாக சுகாதார அதிகாரிகள் கூறுகின்றனர்.

சுகாதார சேவைகள் பிரதிப் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்திய நிபுணர் ஹேமந்த ஹேரத் இதை தெரிவித்தார்.
ஏதேனும் ஒரு வழியில் டெல்டா பிளஸ் இலங்கைக்கு வந்தால், அதன் பரவல் மக்களின் சுகாதாரப் பழக்கத்தை பொறுத்தது என்றும் எச்சரித்துள்ளார்
