திருகோணமலை கந்தளாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் நூறு டொலர் பெறுமதியுடைய 372 அமெரிக்க கள்ள நோட்டுகளுடன் இரண்டு சந்தேக நபர்கள் நேற்றிரவு (23) கந்தளாய் விசேட குற்றத்தடுப்பு பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கொழும்பு மற்றும் குருணாகல் பகுதிகளைச் சேர்ந்த 48 , 49 வயதுடைய இருவரே கந்தளாய் குளத்தினை அண்டிய பகுதியில் வைத்து இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.
குறித்த அமெரிக்கா டொலர்கள் இலங்கை பெறுமதியில் சுமார் 68 இலட்சத்து 5 ஆயிரம் ரூபாவாகும் எனவும் பொலிஸார் தெரிவித்தனர். சந்தேக நபர்களை தடுத்து வைத்துள்ளதோடு, கந்தளாய் நீதிமன்ற நீதிவான் முன்னிலையில் ஆஜர்படுத்த உள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.