வெள்ளத்தில் மூழ்கியது நாவலப்பிட்டி நகரம் ; சுமார் இரண்டு மணிநேரம் போக்குவரத்து பாதிப்பு!

நாவலப்பிட்டி நகரில் நேற்று (06) பிற்பகல் பெய்த கடும் மழை காரணமாக நகரின் பெரும்பாலான பகுதிகள் மழைநீரில் மூழ்கியதுடன், போக்குவரத்தும் முற்றாகப் பாதிக்கப்பட்டது.

நாவலப்பிட்டி பேருந்து நிலையம், நாவலப்பிட்டி – தொலஸ்பாகே பிரதான வீதி, நாவலப்பிட்டி – கண்டி பிரதான வீதி உள்ளிட்ட நகரின் பல பகுதிகள் வெள்ளநீரில் மூழ்கின.

குறிப்பாக, நகரிலிருந்து சுமார் ஒரு கிலோமீற்றர் தூரம் வரை வீதிகளில் வெள்ளநீர் தேங்கியதால், கண்டி மற்றும் ஹட்டன் நோக்கிப் பயணித்த பேருந்துகள் உள்ளிட்ட அனைத்து வாகனங்களின் போக்குவரத்தும் சுமார் இரண்டு மணித்தியாலங்களுக்கு நிறுத்தப்பட வேண்டிய நிலை ஏற்பட்டது.

நாவலப்பிட்டி நகரின் மழைநீர் வடிகால் கட்டமைப்பு பல ஆண்டுகளாக முறையாகச் சீரமைக்கப்படாமையே ஒவ்வொரு மழைக்காலத்திலும் நகரம் வெள்ளத்தில் மூழ்குவதற்கு முக்கிய காரணமாக அமைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

தற்போதைய அரசாங்கம் ஆட்சிக்கு வந்த பின்னர் இப்பிரச்சினைக்குத் தீர்வுகாண மாற்றுத் திட்டங்கள் தயாரிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்பட்ட போதிலும், அவை இதுவரை நடைமுறைப்படுத்தப்படவில்லை.

இதனால், கடும் மழை பெய்யும் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் நாவலப்பிட்டி நகர மக்கள் மற்றும் வர்த்தகர்கள் பெரும் அசௌகரியங்களை எதிர்கொண்டு வருகின்றனர்.

Related Articles

Latest Articles