உடப்புசல்லாவ – வெலிமடை வீதியில் கோர விபத்து; இளைஞன் பலி

உடப்புசல்லாவ – வெலிமடை வீதியில் கோர விபத்து; இளைஞன் பலி

உடப்புசல்லாவ – வெலிமடை வீதியின் கம்பஹவத்தை பகுதியில் நேற்று (05) மாலை இடம்பெற்ற வாகன விபத்தில் 23 வயதுடைய இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

உடப்புசல்லாவ பகுதியிலிருந்து வெலிமடை நோக்கிப் பயணித்த சீமெந்து ஏற்றிச் சென்ற லொறியும், எதிர்த்திசையில் வந்த முச்சக்கரவண்டியும் நேருக்கு நேர் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

இந்த விபத்தில் உயிரிழந்தவர் ஊவா பரணகம, மாணிக்கவத்தை பகுதியைச் சேர்ந்த இளைஞர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

……………

புற்றுநோய் எதிர்ப்பு மருந்துகள் தட்டுப்பாடு: சஜித் பிரேமதாச

தற்சமயம் நாட்டில் சுகாதாரத் துறையில் கடும் மருந்துத் தட்டுப்பாடு நிலவுவதால், நோயாளிகள் பல கடுமையான பிரச்சினைகளை எதிர்கொண்டு வருகின்றனர் என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இன்று (06) பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

அரச மற்றும் தனியார் ஆகிய இரு துறைகளிலும் இந்தப் பிரச்சினை காணப்படுகின்றன. புற்றுநோய் எதிர்ப்பு மருந்துகளைப் போலவே ஏனைய மருந்துகளுக்கும் தட்டுப்பாடுகள் நிலவுகின்றன. எனவே, இது தொடர்பில் விரைந்து கவனம் செலுத்தி, இந்த தட்டுப்பாட்டை தவிர்ப்பதற்கு நடவடிக்கைகளை எடுக்குமாறு அரசாங்கத்தைக் கேட்டுக்கொளகிறேன் என்று எதிர்க்கட்சித் தலைவர் இங்கு தெரிவித்தார்.

…………..

சாமர சம்பத் தசநாயக்கவுக்கு மீண்டும் விளக்கமறியல்

 

பதுளை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் முன்னாள் இராஜாங்க அமைச்சருமான சாமர சம்பத் தசநாயக்க, 8.4 மில்லியன் ரூபா இலஞ்சம் பெற்றதாகக் கூறப்படும் குற்றச்சாட்டு தொடர்பில் எதிர்வரும் நவம்பர் 10ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

கொழும்பு நீதவான் நீதிமன்றம் இன்று (06) இந்த உத்தரவைப் பிறப்பித்ததுடன், அவரது முன்னாள் தனிப்பட்ட செயலாளரையும் அதே திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டுள்ளது.

இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழுவின் (CIABOC) சமர்ப்பிப்புகள் மற்றும் சந்தேகநபர்கள் சார்பில் ஆஜரான சட்டத்தரணிகளின் வாதங்களைப் பரிசீலித்த கொழும்பு பிரதம நீதவான் அசங்க எஸ். போதரகம இந்த உத்தரவைப் பிறப்பித்தார்.

பொஸ்பேட் இறக்குமதியில் ஈடுபட்ட மூன்று நிறுவனங்களுக்கு இறக்குமதி அனுமதிப்பத்திரங்களை உரிய நடைமுறைகளைப் பின்பற்றாமல் வழங்குவதற்காக, சாமர சம்பத் தசநாயக்க 8.4 மில்லியன் ரூபா இலஞ்சம் கோரிப் பெற்றதாகக் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.

2022 செப்டெம்பர் 8ஆம் திகதி முதல் 2024 செப்டெம்பர் 23ஆம் திகதி வரை அவர் ஆரம்பக் கைத்தொழில் இராஜாங்க அமைச்சராகப் பதவி வகித்த காலப்பகுதியிலேயே இந்தக் குற்றச்செயல்கள் இடம்பெற்றதாகக் கூறப்படுகிறது.

இந்தக் குற்றச்சாட்டுகள் தொடர்பில் சாமர சம்பத் தசநாயக்கவும் அவரது முன்னாள் தனிப்பட்ட செயலாளரும் ஏற்கனவே இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவினால் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தனர்.

……………

நம்பிக்கையில்லாப் பிரேரணையில் திருத்தம் மேற்கொள்ள முடியாது

1988, 1989 காலப்பகுதியிலேயே பயங்கரவாதத்திலிருந்து அரசைப் பாதுகாக்கும் சட்டமூலம் கொண்டுவரப்பட்டிருக்க வேண்டும். அவ்வாறு கொண்டுவரப்பட்டிருந்தால், ஜே.வி.பியினர் இன்று இருந்திருக்கமாட்டார்கள் என்று ஐக்கிய மக்கள் சக்தியின் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்தார்.

கொழும்பில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியதாவது:

“நாட்டில் இன்று போர் இல்லை. பயங்கரவாதமும் இல்லை. இவ்வாறானதொரு பின்னணியில் பயங்கரவாதத்திலிருந்து அரசைப் பாதுகாக்கும் சட்டமூலத்தைக் கொண்டுவருவதன் நோக்கம் என்ன?

பயங்கரவாதச் செயல்களில் ஈடுபட்டவர்கள் இன்று நாடாளுமன்றத்தில் இருக்கின்றனர். 1988, 1989 காலப்பகுதியிலேயே மேற்படி சட்டமூலம் மிகவும் பொருத்தமானதாக இருந்திருக்கும்.

பயங்கரவாதத்திலிருந்து அரசைப் பாதுகாத்தல் உள்ளிட்ட அடக்குமுறைச் சட்டமூலங்களுக்கு எதிராக முன்னெடுக்கப்படும் போராட்டங்களுக்கு நாம் ஆதரவளிப்போம்.

அதேவேளை, அரசாங்கத்துக்குத் தேவையான விதத்தில் நம்பிக்கையில்லாப் பிரேரணையை முன்வைப்பதற்கு நாம் தயாரில்லை. சபாநாயகருக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணையில் எந்தவொரு திருத்தமும் மேற்கொள்ளப்படமாட்டாது” என்றார்.

………………..

ட்ரம்ப்பை சர்வதேச பயங்கரவாதியென விமர்சித்த ட்ரம்ப்

“உலகின் மிகப்பெரிய சர்வதேச பயங்கரவாதியான டொனால்ட் டிரம்ப் கடந்த 4 ஆம் திகதியன்று ஒரு பாரிய பின்னடைவைச் சந்தித்துள்ளார்;இப்போது, டிரம்பின் முகத்தில் அறைந்தாற்போல, பல குடியேற்றவாசிகள்,அங்கு பிரதிநிதிகள் சபையிலும் செனட்டிலும் ஆளுநர்களாகவும்
செனட்டர்களாகவும் மாறியுள்ளனர்”.இவ்வாறு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் குறிப்பிட்டார்.

பாராளுமன்றத்தில் வியாழக்கிழமை (5) இடம்பெற்ற நம்பிக்கைப் பொறுப்புக்கள் – அறக்கட்டளைகள் திருத்தச் சட்டமூலம் (Trusts Amendment Bill) தொடர்பான இரண்டாம் வாசிப்பு மீதான விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

கண்டி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும்,முஸ்லிம் காங்கிரஸ் தலைவருமான ரவூப் ஹக்கீம் அங்கு உரையாற்றுகையில்,மேலும் கூறியவையாவன:

பயங்கரவாத நிதியூட்டல் பற்றி நாம் பேசும்போது, உலகின் மிகப்பெரிய சர்வதேச பயங்கரவாதியான டொனால்ட் டிரம்ப் கடந்த 4 ஆம் திகதியன்று ஒரு பெரிய பின்னடைவைச் சந்தித்துள்ளார்; அது நம் அனைவருக்கும் ஒரு பெரிய நிவாரணமாகும். உலகம் முழுவதும் குழப்பத்தை (anarchy) கொண்டுவருவதில் அவர் ஈடுபட்டுள்ள பயங்கரவாதத்தால் நாம் அனைவரும் பாதிக்கப்படுகிறோம்.

எனவே, தற்போது அங்கு செனட் மற்றும் காங்கிரஸ் ஆகிய இரு அவைகளின் நிலைப்பாடுகளும் மாறியுள்ளன.

மிகவும் ஆச்சரியமான விடயம் என்னவென்றால், அவரது ஆதரவுத் தளமான ‘MAGA’ ஆனது இரண்டு முக்கியமான கூறுகளை நம்பியிருந்தது. ஒன்று, அவர் “எந்தப் போருக்கும் செல்ல மாட்டேன்” என்று வாக்குறுதி வழங்கினார், ஆனால் அவர் அந்த வாக்குறுதியை மீறிவிட்டார்.

அடுத்தது, அவர் நாட்டில் குடியேற்றவாசிகளைத் தடுத்து நிறுத்த முயன்றார்.

இப்போது, டிரம்பின் முகத்தில் அறைந்தாற்போல, பல குடியேற்றவாசிகள், பிரதிநிதிகள் சபையிலும் செனட்டிலும் ஆளுநர்களாகவும் செனட்டர்களாகவும் மாறியுள்ளனர். அமெரிக்க மக்கள் டிரம்பிற்கு இவ்வாறாக கண்டனம் தெரிவித்துள்ளனர்; நாம் அனைவரும் இதைக் கொண்டாடுவோம்.

குறைந்தபட்சம் இனிமேலாவது அவர் எந்த யுத்தத்தையும் நிறுத்துவார் என்றும், லெபனான் மற்றும் பாலஸ்தீனத்துடனான போரை நிறுத்துமாறு தனது கூட்டாளியான நெதன்யாகுவையும் அவர் சமாதானப்படுத்துவார் என்றும், இறுதியில் முழு உலகிற்கும் அழிவைக் கொண்டுவருவதிலிருந்து அவர்கள் விலகிக் கொள்வார்கள் என்றும் நாங்கள் நினைக்கிறோம்.

எனவே, இதைக் கூறிக்கொண்டு, இந்த மகத்தான சாதனைக் கொண்டாட்டத்தின் மத்தியில், குறிப்பாக அவர் மீது இந்த மோசமான பலத்த அடியைக் கொடுத்ததற்காக அமெரிக்க பொதுமக்களுக்கு வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். ” – என்றார்.

…………….

 

 

 

Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05

Related Articles

Latest Articles