வேட்பாளர் பயணித்த கார்மீது கல்வீச்சு தாக்குதல்

ஜனநாயகத் தமிழ்த் தேசிய கூட்டணியின் யாழ்ப்பாணம் தேர்தல் மாவட்ட வேட்பாளர் சசிகலா ரவிராஜ் பயணித்த கார் மீது இனந்தெரியாத நபர்கள் கல் வீச்சுத் தாக்குதலை மேற்கொண்டுள்ளனர்.

சசிகலா ரவிராஜ், யாழ். சாவகச்சேரியில் தனது வீட்டில் இருந்து நேற்று செவ்வாய்க்கிழமை மாலை பிரசாரப் பணிகளுக்காகக் காரில் பயணித்தபோது கார் மீது கல் வீச்சுத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது .

காரில் சசிகலா ரவிராஜ் இருந்த போதிலும் காயங்கள் எதுவும் இன்றி தப்பியுள்ளார்.

இந்தச் சம்பவம் தொடர்பில் சாவகச்சேரி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ள நிலையில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

அதேவேளை, கடந்த சில தினங்களுக்கு முன்னர் சசிகலா ரவிராஜ்ஜின் வீட்டின் ஜன்னல் கண்ணாடிகளும் கல் வீசி உடைக்கப்பட்டிருந்த நிலையில், நேற்று அவர் பயணித்த கார் மீது கல் வீச்சுத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related Articles

Latest Articles