தொழிற்சங்க நடவடிக்கைகளில் ஈடுபடுவதினூடாக நாட்டின் சட்டத்தை மீறினால், அதற்கெதிராக சட்டம் நடைமுறைப்படுத்தப்படும் – பந்துல குணவர்தன

அத்தியவசிய சேவைகளாக குறிப்பிடப்பட்டுள்ளவற்றில் கடமை புரியும் அரச ஊழியர்கள் தொழிற்சங்க நடவடிக்கைகளில் ஈடுபடுவதினூடாக நாட்டின் சட்டத்தை மீறினால், அதற்கெதிராக சட்டம் நடைமுறைப்படுத்தப்படும் என்று அமைச்சரவைப் பேச்சாளர், வெகுஜன ஊடகத்துறை அமைச்சர் கலாநிதி பந்துல குணவர்தன தெரிவித்தார்.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று (14) நடைபெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் வாராந்த செய்தியாளர் மாநாட்டில் அமைச்சர் மேலும் தெரிவிக்கையில்,கடந்த வாரமும் நாடு முழுவதும் வழமையான செயற்பாடுகள் ஸ்தம்பிதம் அடையும் என்று கூறப்பட்டது. பாடசாலை நடவடிக்கைகள் இடம்பெறாது, வைத்தியசாலைகளும் செயற்படாது, பஸ்கள் நிறுத்தப்படும், புகையிரதங்களும் நிறுத்தப்படும் என்று தெரவிக்கப்பட்டது. ஆனால் அவ்வாறு எதுவும் இடம்பெறவில்லை.

சமகால அரசாங்கம் நாட்டில் இடம்பெற்ற மின் துண்டிப்பை இல்லாமல் செய்தது. தற்பொழுது தொடர்ச்சியாக மின்சாரம் வழங்கப்படுகின்றது. பல நாட்களாக தமது வாகனங்களுடன்; எரிபொருளுக்காக நீண்ட வரிசைகளில் காத்திருந்து சிலர் இறந்த சம்பவங்களும் பதிவாகின. தற்போது எந்தவொரு எரிபொருள்ள வரிசையும் இன்றி எரிபொருட்களை பெற்றுக்கொள்கின்றனர்.

கடந்த காலங்களில் சிலிண்டர்களை சுமந்த வண்ணம் எரிவாயுவை தேடி மக்கள் அழைந்தனர்.. பெரும் சிரமத்திற்கு மத்தியில் ஜனாதிபதி அவர்கள் இச்சவால்களை எதிர்கொண்டு அவற்றிற்கான தீர்வைக் கண்டார். தற்பொழுது நாட்டின் மேம்பாட்டிற்காக அவர் பணிகளை முன்னெடுத்து வருகிறார் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.

சர்வதேச நாணய நிதியத்தின் பணிப்பாளர் சபை எதிர்வரும் 20 ஆம் திகதி கூடி நீண்டகால நிதி உதவியை எமக்கு வழங்க உள்ளது. இதற்கான அங்கீகாரத்தை வழங்குவதற்கு அந்நிறுவனம் தயாராக உள்ளது. இதனை சீர்குழைப்பதற்கு இடமளிக்காமல் அரசாங்கத்தினால் மக்களின் மாமுல் வாழ்க்கை, மாணவர்களின் கல்வி, நாட்டில் நாளாந்தம் கடமைகளில் ஈடுபடுவோர், கூலித் தொழிலை மேற்கொள்வோர், சுய முயற்சிகளில் ஈடுபடுவோர் உள்ளிட்டோரின் நலனுக்காக தற்போது நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

தொடர்ச்சியாக அரச சேவையை முன்னெடுப்பதற்காக இவற்றை அத்தியவசிய சேவையாக வர்த்தமானியின் மூலம் அறிவிக்கப்பட்டுள்ளது. துறைமுகம்,  போக்குவரத்து, தபால், மின்சாரம் உள்ளிட்ட அனைத்தும் அத்தியவசிய சேவைகளாக பரிமாற்றம் செய்யப்பட்டுள்ளன. நாட்டில் சட்டத்தை சீர்குழைத்தால் அதற்காக மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் குறித்து சட்டத்தை சீர்குழைத்த பின்னர் முன்னெடுக்கப்படும். சட்டத்தை முறையாக செயற்படத்த வேண்டும் என்பதை வர்த்தமானி அறிவிப்பில் முறையாக குறிப்பிடப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் பந்துல குணவர்தன மேலும் தெரிவித்தார்.

Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05

Related Articles

Latest Articles