கணினி யுகத்துடன் ஆரம்பித்த வைரஸ் காலத்தை இன்றுவரை பயனாளர்கள் அனுபவித்தபடியுள்ளார்கள். இந்த வைரஸ்களிடமிருந்து கணினிகளை பாதுகாப்பதற்கு முன் முதலில் காப்பரணாக வந்து இறங்கிய ஆபத்பாந்தவர்தான் McAfee – மென்பொருள். இன்றுவரை அதனை யாரும் மறந்திருக்கமாட்டார்கள். இந்த மென்பொருள் நிறுவனத்தின் ஆரம்பகால முதலாளி John McAfee நேற்று ஸ்பானிய சிறையில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார்.
பிரித்தானிய பிரஜையான John McAfee கடந்த வருடம் ஸ்பெயினிலிருந்து துருக்கிக்கு புறப்படும்வேளை விமானநிலையத்தில் வைத்து மிகப்பெரிய வரிமோசடி குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு சிறைவைக்கப்பட்டார். இவரை அமெரிக்காவுக்கு நாடு கடத்துமாறு தாக்கல் செய்யப்பட்ட கோரிக்கைக்கு, அண்மையில் ஸ்பானிய நீதிமன்றம் அனுமதி வழங்கியிருந்தது. இதனையடுத்து, John McAfee தனது சிறையறையில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.
2011 ஆம் ஆண்டு John McAfee தனது McAfee நிறுவனத்தை 7.7 பில்லியன் டொலர்களுக்கு Intel நிறுவனத்துக்கு முழுதாக விற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இறக்கும்போது இவருக்கு வயது 75. பார்ஸிலோனா சிறையில் இடம்பெற்ற இவரது மரணத்தை இவரின் சட்டத்தரணி உறுதிசெய்தார்.